செய்திகள்,திரையுலகம் அக்னி (2014) திரை விமர்சனம்…

அக்னி (2014) திரை விமர்சனம்…

அக்னி (2014) திரை விமர்சனம்… post thumbnail image
நாயகன் சிவா பைத்தியமாக காட்டில் சுற்றி அலைந்துகொண்டிருக்கிறான். கோர முகத்துடன் அலையும் அவன், அந்த வழியாக வரும் காதலர்கள், தம்பதியர்களை அடித்து கொடூரமாக கொலை செய்கிறான். அப்படி கொலை செய்துவிட்டு, ஒவ்வொருவர் உடலில் இருந்தும் ஒரு பாகத்தை எடுத்து செல்கிறான். இப்படியாக அவன் 5 கொலைகளை செய்கிறான்.இந்த கொலைகளை பற்றி துப்பு துலக்கும் போலீசார் கொலையாளி யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். இறுதியில் கொலையாளியை அவர்கள் கண்டுபிடித்தார்களா? நாயகன் சிவா பைத்தியமாக காட்டில் திரியவும், அந்த கொலைகளை செய்யவும் காரணம் என்ன? என்பதே மீதிக்கதை.

காதல் தோல்வியால் விரக்தியடைந்தவன் படும் வேதனையை படத்தில் சொல்லியிருக்கும் இயக்குனர் ஹரிகேசவாவே இப்படத்தில் நடித்திருக்கவும் செய்திருக்கிறார். பைத்தியக்காரனாக வரும் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் நடிப்பு தெரிகிறது. மற்றபடி, காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் நடிப்பை வரவழைக்க ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார்.நாயகி கவின் ஸ்ரீ அழகாக இருந்தாலும், நாயகனை வெறுத்து ஒதுக்கும் காட்சிகளில் மிளிர்கிறார். பிளாஸ்பேக் காட்சிகளில் மட்டுமே இவர் வருவதால் திரையில் சில நேரங்களே இவரை காணமுடிகிறது. படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் ஏதோ கேமராவுக்கு போஸ் கொடுப்பது போல் வந்து போயிருக்கிறார்கள். படத்தில் காமெடிக்கென்று தனியாக டிராக் இல்லாமல் இருந்த போதிலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் நடிப்பும் நமக்கு சிரிப்பை வரவழைக்கிறது.

கே.குருநாதன் இசையில் பின்னணி இசை பரவாயில்லை. பாடல்கள் சுமார் ரகம். சமூகத்துக்கு சொல்ல நினைக்கும் கருத்தை படமாக கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் இயக்குனர்களுக்கு ஓர் வேண்டுகோள். தங்களுடைய கருத்தை ஒரு நல்ல படமாக கொடுத்தால் மட்டுமே மக்களை அது சென்றடையும். அக்னி மாதிரி புரியாத படமாக எடுத்தால் அது மக்களுக்கு வெறுப்பை தான் வரவழைக்குமே தவிர, அவர்களுக்கு அந்த கருத்து சென்றடையாது. எனவே, இவ்வளவு செலவு செய்து படமாக எடுப்பதற்கு பதிலாக வேறு வழியில் உங்கள் கருத்து மக்களை சென்றடைய என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம். மாறாக, இதுபோன்ற படங்கள் எடுத்து மக்களின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்.

மொத்தத்தில் ‘அக்னி’ சுடவில்லை…

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி