செய்திகள்,திரையுலகம் 8 வருடங்களுக்கு பிறகு தமிழில் டப் ஆகும் தெலுங்கு படம்!…

8 வருடங்களுக்கு பிறகு தமிழில் டப் ஆகும் தெலுங்கு படம்!…

8 வருடங்களுக்கு பிறகு தமிழில் டப் ஆகும் தெலுங்கு படம்!… post thumbnail image
சென்னை:-2006ம் ஆண்டு வெளியான தெலுங்கு படம் கத்தர்நாக். சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தில் ரவிதேஜா, இலியானா, பிஜுமேனன், பிரகாஷ்ராஜ் நடித்திருந்தனர். கீரவாணி இசை அமைத்திருந்தார். அம்மா ராஜசேகர் இயக்கி இருந்தார். ஆக்ஷன் காட்சிகளுக்காகவும், இலியானாவின் கவர்ச்சிக்காகவும் ஓடிய படம்.

பிரபல தாதா கோட்டா சீனிவாராவின் மகன் ரவிதேஜா. கோட்டா ஒரு வழக்கில் ஜெயிலுக்கு போய்விட ரவி அநாதையாகிறார். படிப்பும் 9ம் வகுப்போடு நின்று விடுகிறது. சர்வதேச போதை கும்பல் ஒன்று நாட்டையே அலற வைக்கிறது. அதை கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரி பிரகாஷ்ராஜ் ஒரு ஒற்றரை அந்த கூட்டத்துக்குள் அனுப்புகிறார். அவரை கொன்று விடும் கடத்தல் கும்பல் போலீசுக்குள் ஒரு ஒற்றனை அனுப்ப ரவி தேஜாவை தேர்வு செய்கிறது.

போலீசுக்கு பத்தாவது படிப்புதான் அடிப்படை என்பதால் அவரை பத்தாவது படிக்க வைக்கிறது. படிக்கப்போன இடத்தில் டீச்சர் இலியானாவுடன் அவருக்கு காதல் வருகிறது. அப்புறம் என்ன நடக்கிறது என்பது மீதி கதை. இந்தப் படம் மிஸ்டர் சீக்ரெட் என்ற கொரிய படத்தின் ரீமேக். தமிழ் டப்பிங்கிற்கு கில்லாடி தாஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அடுத்த மாதம் ரிலீசாகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி