செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் வீரம் இயக்குனரைப் பாராட்டிய ‘தல’ ரசிகர்கள்…!

வீரம் இயக்குனரைப் பாராட்டிய ‘தல’ ரசிகர்கள்…!

வீரம் இயக்குனரைப் பாராட்டிய ‘தல’ ரசிகர்கள்…! post thumbnail image
தமிழில் ‘சிறுத்தை’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. இப்படத்தில் கார்த்தி, தமன்னா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் இவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. இவர் இயக்குனர் மட்டுமல்லாது பல தெலுங்கு படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார்.

சிறுத்தை படத்தை தொடர்ந்து சிவா என்ன படம் இயக்குவார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நேரத்தில் அஜீத் நடிப்பில் வீரம் படத்தை இயக்குவதாக செய்திகள் வந்ததும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதனை நிரூபிக்கும் விதமாக வீரம் படம் 100 நாட்களைக் கடந்து மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இதிலிருந்து சிவாவிற்கு அஜீத்தின் ரசிகர்கள் அதிகமாகி விட்டனர்.

சிவாவின் பிறந்தநாளன்று அவருக்கு ஏகப்பட்ட அஜீத் ரசிகர்கள் வாழ்த்து கூறியுள்ளனர். அவருடைய சமூக வலைத்தளமான டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்துள்ளனர். இதனால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய சிவா, தல ரசிகர்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி