இந்நிலையில், அந்தக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செம்பியன், இன்னும் 2 நாட்களில் போரட்டம் தொடங்கும் என்று அறிவித்திருக்கிறார். நாங்கள் கத்தி படத்துக்கு எதிரான போராட்டத்தில் எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் பின்வாங்கப் போவதில்லை. தற்போது சில மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. இன்னும் 2 நாட்களில் அனைவருக்கும் தேர்வு முடிந்துவிடும். அதன் பிறகு அனைத்து மாணவர்கள் அமைப்புக்களையும் ஒருங்கிணைத்து விஜய் வீடு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வீடு, விஜய் மக்கள் இயக்கம் அலுவலகம், டி.நகரில் உள்ள லைகா நிறுவனத்தின் அலுவலகம், அடையாறில் உள்ள லைகா அலுவலகம் என அனைத்து இடங்களிலும் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
ஈழத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் அனைத்து அமைப்புகளிடமும் இது குறித்து பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறோம். எங்களிடம் உள்ள அனைத்து தகவல்களையும் கொண்டு தமிழகத்தின் முக்கிய தலைவர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என அனைவரையும் சந்திக்க இருக்கிறோம். கத்தி தொடர்பாக எங்களின் போராட்டத்தில் எந்தவித காரணம் கொண்டும் பின்வாங்க போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி