புது டெல்லி:-சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை கடும் சரிவை சந்தித்து வருவதால், சந்தை சூழ்நிலைக்கேற்பவும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் ஏற்றம் மற்றும் வீழ்ச்சியின் அடிப்படையிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோலின் விலையை மாற்றி அமைக்கும் எண்ணை நிறுவனங்களின் முடிவின்படி, வரும் 15-ம் தேதி பெட்ரோல் விலை குறைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்தியன் ஆயில் காப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் பி.அசோக், பெட்ரோலின் விலை குறைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. ஆனால், எவ்வளவு குறையும் என்பது பற்றி இப்போதே தீர்மானமாக கூற முடியாது. இது பற்றி வரும் 15-ம் தேதி தான் இறுதி முடிவு எடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.15-ம் தேதி பெட்ரோல் விலை சுமார் 2 ரூபாய் வரை குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி