ஜிகர்தண்டா படத்தில் நடிக்க முக்கிய காரணம் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ்தான். உடன் நடித்த சிம்ஹாவின் நட்பு, கதாநாயகன் என்று பாராமல் சித்தார்த் நண்பர் மாதிரி பழகியது, படத்தில் நடித்த அனைவரின் ஒத்துழைப்பு ஆகியவைதான் படத்தின் வெற்றிக்கு காரணம் ஆகும்.எனக்கு காமெடி நடிகர்கள் சந்தானம், பாஸ்கர், தம்பிராமையா ஆகியோர் பிடிக்கும். அதேபோல பிடித்த குணச்சித்திர நடிகர் நாசர் சார். என்றுமே அவர் எனக்கு பிடித்த நடிகர். ரஜினிசாரின் லிங்கா குழுவில் இருந்து போன் வந்தது. நீங்க லிங்கா படத்தில் நடிக்கிறீங்க என்றனர். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
முதல் நாள் சூட்டிங்கில் தலைவரை நேரில் பார்த்து நான் வியந்துபோனேன். எளிமைக்கு இலக்கணம் ரஜினி சார்தான். தலைவரை சந்தித்தது என் வாழ்நாளின் சாதனை. ரஜினி சார் என்னிடம் அன்பாக பழகினார். பீட்சா படம் பற்றி பேசினார். தொடர்ந்து அனைவருக்கும் பிடித்த மாதிரி நடிக்க வேண்டும். இப்போது இருக்கும் பெயரை காப்பாற்ற வேண்டும்.தற்போது ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சாலை, நண்பேண்டா, கப்பல், மகாபலிபுரம், லிங்கா போன்ற படங்களில் நடிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி