செய்திகள்,திரையுலகம் அறிமுகப்படுத்திய நடிகர் சித்தார்த்துக்கு வில்லனான சிம்ஹா!…

அறிமுகப்படுத்திய நடிகர் சித்தார்த்துக்கு வில்லனான சிம்ஹா!…

அறிமுகப்படுத்திய நடிகர் சித்தார்த்துக்கு வில்லனான சிம்ஹா!… post thumbnail image
சென்னை:-‘ஜிகர்தண்டா’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தாலும் படத்தில் நாயகனாக நடித்த சித்தார்த்தை விட வில்லனாக நடித்த சிம்ஹாவுக்குத்தான் பாராட்டுக்கள் அதிகம் குவிகின்றன.இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் சிம்ஹாவை, சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியதே சித்தார்த் தானாம். சித்தார்த் அவருடைய சொந்தத் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்த ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தில் இரண்டே இரண்டு காட்சிகளில் நடித்தாராம். அந்தப் படத்தில் சிம்ஹாவை ஒரு நடிகராக அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார் சித்தார்த்.

அன்று இரண்டு காட்சிகளில் நடித்தவர், இன்று சித்தார்த்துக்கே வில்லனாக நடித்து வீறு கொண்டு எழுந்திருக்கிறார், இப்போது ‘ஜிகர்தண்டா’ படம் மூலம் அவருக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தைச் சேர்த்து விட்டார்.அடுத்து சிம்ஹா நாயகர்களில் ஒருவராக நடித்துள்ள ‘ஆடாம ஜெயிச்சோமடா’ படம் வெளிவர உள்ளது. ‘உறுமீன்’ என்ற படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி