உடனடியாக ரஜினியே ரோஹித் இருக்கும் இடத்தை நோக்கி வந்தார். தன்னை நோக்கி ரஜினி வருவதை கண்டதும் ஒரு நிமிடம் ஷாக் ஆனார் இயக்குனர். வந்த வேகத்தில் ரோஹித்தை வரவேற்ற ரஜினி நலம் விசாரித்ததுடன், உங்களுடைய பணி எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் உங்கள் ரசிகன் என்றார்.பின்னர் இதுபற்றி ரோஹித் கூறும்போது, உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று நான் எண்ணிக்கொண்டிருக்கும் ரஜினி எந்தவித பந்தாவும் இல்லாமல் என்னைவந்து சந்தித்து நலம் விசாரித்து பாராட்டியபோது எனக்கு மயக்கமே வந்துவிட்டது.
அவர் முன்னால் நான் ஒன்றுமே கிடையாது. ஆனாலும் என்னை அவர் மரியாதையுடன் நடத்தினார் என்றார். பின்னர் ரஜினியுடன் நின்று ரோஹித் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.அருகில் இருந்த டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார், எவ்வளவு புகைப்படம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் அதை தயவுசெய்து ஆன் லைனில் வெளியிட்டு விடாதீர்கள். அப்படி வெளியிட்டால் லிங்காவில் ரஜினி ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் சஸ்பென்ஸ் வெளிப்பட்டுவிடும் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி