அடுத்தடுத்து, பூஜா, காம்னா, கிரண் என்று படத்துக்குப்படம் வேற்று மொழி நடிகைகளை நடிக்க வைத்த அவர், தற்போது இயக்கியுள்ள ஆயிரத்தில் இருவர் படத்தில் டேராடூனைச் சேர்ந்த சாமுத்திரிகா, பெங்களூரைச் சேர்ந்த ஸ்வஸ்திகா, மும்பையைச் சேர்ந்த கேஷா கம்பட்டி ஆகிய நடிகைகளை ஒரே படத்தில் இறக்குமதி செய்திருக்கிறார்.அவரிடத்தில், மொழி தெரியாத ஒரு நடிகையை வைத்து வேலை வாங்குவது கடினம் என்று மற்ற இயக்குனர்கள் தவிர்த்து வரும்போது நீங்கள் மட்டும் படத்துக்குப்படம் வேற்று மொழி நடிகைகளை நடிக்க வைத்து வருவது ஏன் என்று கேட்டால், அதற்கு காரணம் காதல் மன்னன் மானுதான் என்கிறார்.
மற்ற மொழியைச் சேர்ந்த நடிகைகளுக்கு மொழி தெரியாது என்பது ஒரு மைனஸ்தான். ஆனால், அவர்கள் திறமையானவர்களாக, நடிப்பில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிற பட்சத்தில், தமிழில் கொடுக்கும் டயலாக்கை அவரவர் தாய்மொழியில் எழுதி வைத்துக்கொண்டு உடனுக்குடன் நடிக்க தயாராகி விடுகிறார்கள்.காதல் மன்னன் படத்தில் மானுவை இயக்கியபோது அவரது உற்சாகத்தை பார்த்து அசந்து விட்டேன். அதனால்தான் அதன்பிறகு திறமையான நடிகைகளாக மற்ற மொழிகளில் இருந்து கொண்டு வந்து நடிக்க வைத்தேன். அந்த வகையில், எனக்கு இந்த தைரியத்தை முதலில் கொடுத்தவர் மானுதான் என்கிறார் சரண்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி