அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு தயான்சந்த் பெயர் பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரை!…

தயான்சந்த் பெயர் பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரை!…

தயான்சந்த் பெயர் பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரை!… post thumbnail image
புதுடெல்லி:-நாட்டின் பல்வேறு துறைகளில் அரும் பெரும் சாதனைகள் படைத்த குடிமக்களுக்கு, இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கப்பட்டு வருகிறது. மறைந்த ஹாக்கி ஜாம்பவான் தியான் சந்த்திற்கு கவுரவம் அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

தற்போது ஹாக்கி வீரர் தியான் சந்த்திற்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க பிரதம அமைச்சகத்திற்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. மேஜர் தியான் சந்த்திற்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து பரிந்துரைகள் பெறப்பட்டன. இதனையடுத்து பிரதம அமைச்சகத்திற்கு இந்த பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளது. என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி