இரட்டை சதம் விளாசியதன் மூலம் 31 தர புள்ளிகளை கூடுதலாக பெற்ற அவர் ஒரு இடம் உயர்ந்து, இதுவரை ‘நம்பர் ஒன்’ ஆக இருந்த தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்சை பின்னுக்கு தள்ளியுள்ளார். 36 வயதான சங்கக்கரா முதலிடத்தை பிடிப்பது 2012–ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.
அவர் தற்போதைய நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 81 டெஸ்டுகள் மற்றும் 671 நாட்கள் முதலிடத்தில் இருந்திருக்கிறார். காலே டெஸ்டில் 91 ரன்கள் விளாசிய இலங்கை கேப்டன் மேத்யூஸ் முதல் இடம் அதிகரித்து 5–வது இடத்தை பெற்றுள்ளார்.
இது அவரது சிறந்த தரவரிசையாகும். விரைவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் இலங்கை முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே 14–வது இடத்தில் தொடருகிறார். இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரில் நடந்த 4–வது டெஸ்டில் இந்திய அணியின் இன்னிங்ஸ் தோல்வி தரவரிசையிலும் எதிரொலித்து இருக்கிறது.இந்த டெஸ்டில் 0, 17 ரன் எடுத்து சொதப்பிய இந்திய வீரர் புஜாரா 10–வது இடத்தில் இருந்து 12–வது இடத்திற்கு சென்று விட்டார். இதன் மூலம் இப்போது டாப்–10–ல் இந்தியர்கள் யாருக்கும் இடம் இல்லை. இதே போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் ஒற்றை இலக்கில் நடையை கட்டிய மற்றொரு முன்னணி வீரர் விராட் கோலி 5 இடங்கள் சரிந்து 20–வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்திய கேப்டன் டோனி 32–வது இடத்திலும் (2 இடம் ஏற்றம்), ரஹானே 34–வது இடத்திலும் (8 இடம் சரிவு), முரளிவிஜய் 30–வது இடத்திலும் (6 இடம் இறக்கம்) உள்ளனர். பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் தென்ஆப்பிரிக்காவின் ஸ்டெயின் முதலிடத்தில் நீடிக்கிறார்.பாகிஸ்தானுக்கு எதிராக 6 விக்கெட்டுகளை சாய்த்த இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் 8–வது இடத்தில் இருந்து 6–வது இடத்திற்கு வந்துள்ளார். இந்திய பவுலர்களின் சிறந்த தரநிலையாக அஸ்வின் 13–வது இடத்திலும், பிரக்யான் ஓஜா 15–வது இடத்திலும், இஷாந்த் ஷர்மா 20–வது இடத்திலும் உள்ளனர்.டெஸ்ட் ஆல்–ரவுண்டர்களின் தரவரிசையில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் முதலிடத்தை எட்டிப்பிடித்துள்ளார். மான்செஸ்டர் டெஸ்டில் இரு இன்னிங்சிலும் முறையே 40, 46 ரன்கள் விளாசியதன் மூலம் அவர் இரு இடங்கள் ஏற்றம் பெற்று, நம்பர் ஒன் ‘ஆல்–ரவுண்டர்’ அந்தஸ்தை தட்டிச் சென்றிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி