சென்னை:-பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் அஞ்சான். ஆகஸ்ட் 15ம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. இந்தப் படத்தின் சென்னை ஏரியாவின் விநியோக உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கி இருக்கிறார்.ரஜினி நடித்த சிவாஜி படத்தின் சென்னை விநியோக உரிமையை அபிராமி ராமநாதன் தான் வாங்கினார். அப்போது சிவாஜி திரைப்படத்தை சென்னையில் மட்டும் 17 தியேட்டர்களில் ரிலீஸ் செய்தார்.
இப்போது சிவாஜி படத்தின் சாதனையை முறியடிக்கும் விதமாக அஞ்சான் படத்தை சென்னையில் மட்டும் 37 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார் அபிராமி ராமநாதன்.சில தினங்களுக்கு முன் அஞ்சான் படத்திற்கான முன் பதிவு துவங்கியது. முன் பதிவு துவங்கிய 2 மணி நேரத்திலேயே 5000 டிக்கெட்டுகளுக்கும் மேல் முன் பதிவாகி இன்னொரு சாதனையும் படைத்திருக்கிறது அஞ்சான்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி