செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் காந்தியை தவிர யார் படமும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெறாது: ரிசர்வ் வங்கி திட்டவட்டம்!…

காந்தியை தவிர யார் படமும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெறாது: ரிசர்வ் வங்கி திட்டவட்டம்!…

காந்தியை தவிர யார் படமும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெறாது: ரிசர்வ் வங்கி திட்டவட்டம்!… post thumbnail image
மும்பை:-மும்பையில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனிடம், இந்திய இலக்கியத்தின் பெருமைக்குரிய அடையாளமாக திகழும் ரவீந்திரநாத் தாகூர், இந்திய அணு தொழில்நுட்பத்தின் முன்னோடியாக விளங்கிய ஹோமி பாபா ஆகியோரின் படங்களை இந்திய ரூபாய் நோட்டுகளில் அச்சிட்டால் என்ன என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த ரகுராம் ராஜன், இந்தியாவில் ரூபாய் நோட்டில் படம் அச்சடிக்கும் அளவுக்கு எத்தனையோ உயர்ந்த தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் உருவங்களை ரூபாய் நோட்டுகளில் அச்சடித்தால் சர்சை உருவாகும் என நான் உணர்கிறேன்.சமீபத்தில் நடந்த சம்பவத்தை இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். விளையாட்டு துறைக்கென தனியாக விருதுகள் இருக்கும்போது, ஒரு விளையாட்டு வீரருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது பெரும் சர்ச்சைக்குள்ளாகி விட்டது.

உண்மையிலேயே யார் சிறந்தவர் என்பது தொடர்பாக பல விவாதங்கள் எழக்கூடும். எனவே, நாட்டில் உள்ள உயர்ந்த தலைவர்களில் எல்லாம் சிறந்தவரான மகாத்மா காந்தியை தவிர யாருடைய உருவப்படத்தையும் ரூபாய் நோட்டுகளில் அச்சிடும் எண்ணம் இல்லை. என்று தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி