வினய் பிகாரி இதில் நடிப்பது தற்செயலாக நடந்ததாம். பூஜை படத்தின் கதையில் ஒரு பகுதி பீகாரில் நடக்கிறது. விஷாலின் சண்டை காட்சிகளையும் அங்கு படமாக்குகின்றனர். இதற்காக லோக்கேஷன்களை தேர்வு செய்து அனுமதி பெறுவதற்காக மந்திரி வினய் பிகாரியை சந்தித்தனர். அப்போது பூஜை படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு தருமாறு டைரக்டர் ஹரியிடம் வினய் பிகாரி கேட்டுள்ளார்.
தான் ஏற்கனவே நிறைய போஜ்புரி படங்களில் நடித்துள்ளதாகவும் ஒரு படத்தை இயக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து பூஜை படத்தில் கலெக்டர் வேடத்தை அவருக்கு கொடுத்துள்ளனர். வினய் பிகாரி ஏற்கனவே அசைவ உணவு சாப்பிடுவதால் கற்பழிப்பு குற்றங்கள் பெருகுகின்றன என சர்ச்சை கருத்தை வெளியிட்டு பரபரப்பாக பேசப்பட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி