டெஹ்ரான்:-ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள விமான நிலையத்தில் சிறிய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தில் 40 பேர் பயணித்துள்ளனர். டெஹ்ரானின் மேற்கு பகுதியில் உள்ள உள்நாட்டு விமான நிலையமான மேஹ்ராபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் குடியிருப்பு பகுதிக்குள் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக அந்நாட்டின் செய்தி நிறுவனமான இர்னா கூறியுள்ளது.
டாபான் ஏர்லைன்சுக்கு சொந்தமான அந்த விமானம் காலை 9.45 மணியளவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதன் என்ஜின் பழுதானதால் அசாதி குடியிருப்பு பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியது. இச்சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த 7 குழந்தைகள் உள்பட 40 பேர் பலியானதாக இர்னா உறுதிப்படுத்தியுள்ளது.தலைநகர் டெஹ்ரானிலிருந்து இந்த விமானம் அந்நாட்டின் கிழக்குப் பகுதி நகரமான டபாசுக்கு சென்ற போதே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி