சென்னை:-தமிழ், மலையாள பட உலகில் 1980, 90களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஊர்வசி. இவருக்கும் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயினுக்கும் 2000ல் திருமணம் நடந்தது. 2008ல் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். விவாகரத்தும் செய்து கொண்டனர். இவர்களுக்கு தேஜாலட்சுமி என்ற பெண் குழந்தை உள்ளது.
கடந்த வருடம் சிவபிரசாத் என்பவரை ஊர்வசி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சிவிபிரசாத் சென்னையில் கட்டுமான தொழில் செய்து வருகிறார். ஊர்வசி கர்ப்பமாக இருந்தார்.
நேற்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஊர்வசிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஊர்வசியின் முதல் மகள் மனோஜ் கே.ஜெயினுடன் வசிக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி