அகமதாபாத்:-குஜராத் மாநிலம் அகமதாபத்தில் இருந்து மும்பைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் 6 ஊழியர்கள் உள்பட 101 பேர் பயணம் செய்தனர்.இந்த விமானம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பறந்த சிறிது நேரத்தில் விமானம் மீது பறவை ஒன்று மோதியது. இதை அறிந்த விமானி உடனே அகமதாபாத் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மீண்டும் அகமதாபாத்தில் தரையிறங்க அனுமதி கேட்டார்.
கட்டுப்பாட்டு அறை அனுமதி கொடுக்க விமானி அவசரமாக விமானத்தை தரையிறக்கினார். இதனால் அனைத்து விமானிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். பெரும்பாலான பயணிகள் மாற்று இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் மும்பை சென்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி