இதேப்போல் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் வாழ்க்கையை மையப்படுத்தி புலிப்பார்வை என்றொரு படம் உருவாகியுள்ளது. பிரவீன் காந்தி இயக்கியுள்ளார். இந்தப்படத்திற்கும் தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு படங்களையும் திரையிட விடமாட்டோம் என மாணவர் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுதொடர்பாக, சென்னையில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர் தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு. அப்போது அவர்கள் பேசுகையில், கத்தி, புலிப்பார்வை படங்கள் தமிழர்களுக்கு எதிராக உள்ளது என்று நாங்கள் எதிர்க்கவில்லை. கத்தி படத்தைத் தயாரிப்பவர் ராஜபக்சேவின் கூட்டாளியான லைக்கா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜா என்பதால்தான் எதிர்க்கிறோம்.
இலங்கைக்கு பொருளாதார ரீதியாக உதவும் லைக்கா நிறுவனம் தமிழகத்தில் கால்பதிக்க விடக் கூடாது. இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில், கத்தி படத்துக்கு தமிழக அரசே தடை விதிக்க வேண்டும்.இன்னொரு படமான புலிப்பார்வையில், பாலச்சந்திரனை சிறார் போராளியாகச் சித்தரித்து தவறான கருத்தை உறுதிப்படுத்துவது மாதிரி காட்சிகளை அமைத்துள்ளனர். இது இனப்படுகொலைக்கான ஆதாரங்களை மழுங்கடிக்கச் செய்யும் செயல். எனவே இந்த இரு படங்களையும் தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம். மீறி அனுமதித்தால், தியேட்டரின் திரைகளை கிழிப்போம் என்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி