செய்திகள்,திரையுலகம் 23வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஹன்சிகா!…

23வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஹன்சிகா!…

23வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஹன்சிகா!… post thumbnail image
சென்னை:-நடிகை ஹன்சிகா எங்கேயும் காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழ் சினிமாவின் சின்ன குஷ்பூ என்று எல்லோராலும் வர்ணிக்கப்படும் ஹன்சிகா, இடையில் சிம்புடன் காதல் பிறகு பிரிவு என்று பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது வாலு, மீகாமன், சுந்தர்.சி.யின் புதியபடம் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருபவர், கடந்த 10 நாட்களாக படப்பிடிப்பு இல்லாததால், ஐரோப்பாவில் தனது நண்பர்களுடன் பொழுதை கழித்தார்.

ஐரோப்பா சுற்றுபயணத்தை முடித்து திரும்பிய ஹன்சிகாவுக்கு இன்று பிறந்தநாள். இந்த பிறந்தநாளை மிக எளிமையாக தனது இல்லத்தில் அம்மா மோனா மோத்வானியுடன் கேக் வெட்டி கொண்டாடினார். பொதுவாக தனது ஒவ்வொரு பிறந்தநாளின் போது குழந்தைகளை தத்தெடுப்பார் ஹன்சிகா. அதன்படி இந்தாண்டும் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க உள்ளார். மேலும் தான் தத்தெடுத்து வளர்த்து வரும் குழந்தைகளுடனும் இந்தாண்டு பிறந்தநாளை கொண்டாடினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி