செய்திகள்,திரையுலகம் இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்… post thumbnail image
இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் ஜிகர்தண்டா திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்…

6.அரிமா நம்பி:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தில் இருந்த அரிமா நம்பி திரைப்படம் சென்னையில் மொத்தம் 32 ஷோவ்கள் ஓடி ரூ.1,28,128 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்திற்கு பின்தங்கியது.
5.திருமணம் எனும் நிக்காஹ்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த திருமணம் எனும் நிக்காஹ் திரைப்படம் சென்னையில் மொத்தம் 168 ஷோவ்கள் ஓடி ரூ.15,47,736 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்திற்கு பின்தங்கியது.
4.சதுரங்க வேட்டை:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த சதுரங்க வேட்டை திரைப்படம் சென்னையில் மொத்தம் 148 ஷோவ்கள் ஓடி ரூ.13,31,820வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்திற்கு பின்தங்கியது.
3.சரபம்:-
கடந்த வாரம் வெளியான சரபம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 75 ஷோவ்கள் ஓடி ரூ.12,36,158 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தை பெற்றுள்ளது.
2.வேலையில்லா பட்டதாரி:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் சென்னையில் மொத்தம் 328 ஷோவ்கள் ஓடி ரூ.78,32,196 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்திற்கு பின்தங்கியது.
1.ஜிகர்தண்டா:-
கடந்த வாரம் வெளியான ஜிகர்தண்டா திரைப்படம் சென்னையில் மொத்தம் 177 ஷோவ்கள் ஓடி ரூ.76,15,396 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி