வால் நட்சத்திரத்தை அடைந்த முதலாவது விண்கலம் ரோசட்டாவே ஆகும். இது, விண்வெளி வரலாற்றில் சாதனையாக கருதப்படுகிறது. ரோசட்டா விண்கலம், அங்கிருந்து பூமிக்கு சமிக்ஜைகளை அனுப்பி வருகிறது. அதன்மூலம், வால் நட்சத்திரத்தை பற்றி மேலும் பல்வேறு தகவல்களை விஞ்ஞானிகள் அறிந்து வருகிறார்கள். அதன் வடிவத்தை அறிந்துள்ளனர். 3 கி.மீ. நீளமும், 5 கி.மீ. அகலமும் கொண்ட ராட்சத பாறையாக அந்த வால் நட்சத்திரம் காணப்படுகிறது.
முன்பு கருதப்பட்டதுபோல, கால்பந்து வடிவத்தில் இல்லை. கழுத்தால் பிணைக்கப்பட்ட இரண்டு பகுதிகளைக்கொண்டு வாத்து போல காட்சி அளிக்கிறது. வால் நட்சத்திரம் பற்றிய இந்த ஆய்வில் சூரிய குடும்பம் குறித்த ரகசியங்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி