இதனைத் தொடர்ந்து ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரையும் ரெயிலில் எதிர்ப்பக்கமாக ஒதுங்கி நிற்குமாறு அதிகாரிகள் கூறினர். இதன்மூலம் அழுத்தம் குறைந்து இடைவெளியில் சிக்கிய காலை அந்தப் பயணி எடுக்கமுடியும் என்று அவர்கள் நினைத்தனர். ஆனால், அவ்வாறு அவரால் தனது காலை விடுவித்துக்கொள்ள முடியவில்லை.உடனடியாக கீழே இறங்கிய 50க்கும் மேற்பட்ட பயணிகள் ஒருங்கிணைந்து அந்த ரெயில் பெட்டியைத் தூக்கியுள்ளனர். இதனால் சற்றே உயர்ந்த அந்தப் பெட்டியினால் கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்தி மற்றவர்கள் அந்த மனிதனை வெளியே இழுத்துள்ளனர்.
ரெயில் நிலையத்தில் இருந்த மருத்துவ உதவியாளர்கள் அவருக்குத் தேவையான சிகிச்சையை அளித்தபின்னர் அந்தப் பயணி அடுத்த ரெயிலைப் பிடித்து தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
முதன்முறையாக இதுபோன்ற சம்பவம் நடந்ததாகக் குறிப்பிட்ட டிரான்ஸ்பெர்த் செய்தித் தொடர்பாளர் கிளேர் க்ரோல் சம்பவம் நடந்த நேரம் அனைத்து ரெயில்வே ஊழியர்களும் அங்கிருந்தது நல்ல விஷயமென்று குறிப்பிட்டார். பயணிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் அவரை காப்பாற்ற முடிந்தது என்றும் இதுதான் மக்கள் சக்தி என்றும் அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி