செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் போர் நிறுத்தத்தை நீடிக்க தயார் – இஸ்ரேல் அறிவிப்பு!…

போர் நிறுத்தத்தை நீடிக்க தயார் – இஸ்ரேல் அறிவிப்பு!…

போர் நிறுத்தத்தை நீடிக்க தயார் – இஸ்ரேல் அறிவிப்பு!… post thumbnail image
டெல்அவிவ்:-இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இஸ்ரேல் நடத்தி வரும் தீவிர தாக்குதலில் இதுவரை 1867 பேர் பலியாகி உள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 67 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

சண்டை தீவிரமானதையடுத்து ஐ.நா. சபை இருதரப்பினரையும் போர் நிறுத்தம் செய்யும்படி கூறியது. அதை ஏற்றுக்கொண்டு 3 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்தனர். நேற்று முன்தினம் போர் நிறுத்தம் தொடங்கியது. இன்றுடன் போர் நிறுத்தம் முடிவுக்கு வருகிறது.போர் நிறுத்தம் முடிந்ததும் மீண்டும் தீவிர தாக்குதல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தவிர்ப்பதற்காக போர் நிறுத்தத்தை நீடிக்கும்படி ஐ.நா.சபை கேட்டுக் கொண்டது. இதை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் கூறும்போது, போர் நிறுத்தத்தை நீடிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் காசாவில் இருந்து தாக்குதல் நடத்தினால் நாங்கள் பதிலடி கொடுப்போம். இதுவரை நடந்த தாக்குதலுக்கு ஹமாஸ் இயக்கத்தினர்தான் பொறுப்பு. அவர்கள் தாக்குவதால்தான் நாங்கள் பதிலுக்கு தாக்குகிறோம் என்று கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி