செய்திகள்,திரையுலகம் நடிகை காஜல் அகர்வாலின் கவர்ந்திழுக்கும் அழகின் ரகசியம்!…

நடிகை காஜல் அகர்வாலின் கவர்ந்திழுக்கும் அழகின் ரகசியம்!…

நடிகை காஜல் அகர்வாலின் கவர்ந்திழுக்கும் அழகின் ரகசியம்!… post thumbnail image
சென்னை:-தமிழ், தெலுங்கில் மட்டுமல்லாது இந்தியிலும் வெற்றிகரமான நாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். சில நடிகைகளுக்கு முகம் வசீகரமாக இருக்கும், சில நடிகைகளுக்கு உடலமைப்பு வசீகரமாக இருக்கும். ஆனால், காஜல் அகர்வாலிடம் இவையிரண்டுமே வசீகரமாக இருக்கும். கிளாமராக சிலர் நடித்தால் மட்டுமே ரசிக்க முடியும்,அவர்களில் தற்போது முன்னணியில் இருப்பவர் காஜல் அகர்வால் மட்டுமே.

அவருடைய அழகைப் பாதுகாத்துக் கொள்ள என்னவெல்லாம் காஜல் என்னவெல்லாம் செய்கிறார் என்பதை சமீபத்தில் சொல்லியிருக்கிறார். மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நிம்மதியாக இருக்க யோகாதான் காரணம் என்கிறார். ஒரு நாளைக்கு இடைவிடாமல் 150 முறை சூரிய நமஸ்காரம் செய்கிறாராம். எங்க சென்றாலும் கூடவே யோகா ‘மேட்டை’ எடுத்துச் செல்ல மறக்க மாட்டேன், அதோடு அனைவரையும் யோகா செய்யச் சொல்வேன் என்கிறார்.டயட்டில் இருப்பது மட்டும் உடலைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்காது. நான் ஒரு நாளைக்கு ஏழு முறை கூட சாப்பிடுவேன்.

ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவேன். உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். பள்ளி நாட்களில் ‘பி.டி. பீரியட்’ என்றாலே சந்தோஷமாக கலந்து கொள்வேன். அதன் பின் கல்லூரிக்கு வந்ததும் ‘ஏரோபிக்ஸ்’ செய்ய ஆரம்பித்தேன். எப்போதுமே வெஜிடேரியன் மட்டுமே சாப்பிடுவேன். எங்கு சென்றாலும் என்னுடன் மினி கிச்சன் ஒன்றை எடுத்துக் கொண்டு செல்வேன். ஹோட்டலில் தங்கினாலும் எனக்காக எனது அம்மா சமைத்துக் கொடுப்பார். கீரை வகைகள், பழச் சாறுகள் ஆகியவை உடலுக்கு மிகவும் நல்லது. பால் பொருட்கள், இனிப்பு வகைககளைத் தவிர்த்தால் நல்லது என்கிறார் காஜல் அகர்வால்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி