செய்திகள்,திரையுலகம் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – நடிகை லட்சுமி மேனன் முடிவு!…

திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – நடிகை லட்சுமி மேனன் முடிவு!…

திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – நடிகை லட்சுமி மேனன் முடிவு!… post thumbnail image
சென்னை:-கும்கி படத்தில் அறிமுகமானபோதே நான் எந்த மொழியில் நடித்தாலும் ஒரு மலையாளியைத்தான் காதலித்து திருமணம் செய்வேன் என்று அன்று அதிரடியாக அறிவித்தவர் லட்சுமிமேனன். 9வது வகுப்பு படிக்கும்போது இப்படி அதிரடியாக அறிவித்தவர் இப்போது திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று திடீர் முடிவெடுத்திருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நான் திருமணமே செய்து கொள்வே மாட்டேன். கல்யாணம் பண்ணிக்காமலேயே எத்தனையோ பேர் இருக்காங்களே. அவர்களெல்லாம் சாதிக்கவில்லையா?. அப்படி நானும் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே சாதிப்பேன். எனக்குப் பிடிச்ச ஹீரோ சித்தார்த்துடன் நடித்து விட்டேன். அடுத்து விஜய், அஜீத்துடன் நடிக்கணும், மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்து விட்டேன். அடுத்து மம்முட்டியுடன் நடிக்க வேண்டும் இப்படி அடுத்தடுத்து நிறைய கனவுகள் இருக்கிறது. என்கிறார் லட்சுமி மேனன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி