இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உணவுப் பொருட்கள் இறக்குமதிக்குத் தடை விதிக்கும் உத்தரவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று கையெழுத்திட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த நாடுகளில் இருந்து உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வதில் ரஷ்யா பிரதான இடத்தை வகிக்கின்றது.தற்போது புடினால் விதிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய தடை உத்தரவு கிழக்கு, மேற்கு நாடுகளுக்கிடையேயான பொருளாதார பழிக்குப் பழியான நடவடிக்கையாக மட்டுமின்றி பனிப்போர் காலத்திற்குப் பிறகு இவ்விரு தரப்பு நாடுகளின் உறவுகளையும் மிகவும் நெருக்கடியான நிலைமைக்குக் கொண்டுவந்துள்ளது.
அமெரிக்காவில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களில் பெரும்பானமையானவை ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதுபோல் அந்நாட்டின் கோழி ஏற்றுமதியிலும் 8 சதவிகிதம் ரஷ்யாவால் வாங்கப்படுகின்றது.இந்த விற்பனையில் மெக்சிகோவிற்கு அடுத்தபடியாக ரஷ்யா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக அமெரிக்க விவசாயத்துறை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து 21.5 சதவிகித காய்கறிகளும், 29 சதவிகித பழங்களும் கடந்த 2011ஆம் ஆண்டில் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகக் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.புடினின் உத்தரவுக்குப் பிறகு தங்களின் உணவுத்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஈக்வடார், பிரேசில், சிலி மற்றும் அர்ஜென்டினா நாடுகளின் தூதுவர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று விபிஎஸ்எஸ் பிரிவின் தகவல் தொடர்பாளரான அலெக்சி அலெக்சீங்கோ குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி