இப்போது அதனை தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் உறுதிப்படுத்தி உள்ளார். தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம், நய்யாண்டி, சமீபத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா படங்களை தயாரித்தவர்.
மூன்று முகம் ரீமேக் பற்றி தயாரிப்பாளர் கதிரேசன் கூறியதாவது: மூன்று முகம் படத்தை ரீமேக் செய்ய சத்யா மூவிசிடமிருந்து உரிமம் பெற்றுள்ளேன். அதனை இயக்கும் இயக்குனர் மற்றும் நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது.
தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தை தயாரிக்கிறேன். அது மூன்று முகம் ரீமேக்கா இல்லை, வேறு கதையா என்பதை அவர் முடிவு செய்வார். வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் நடிக்க வைத்தார். நல்ல வாய்ப்புகள் வந்தால் தொடர்ந்து நடிக்கவும் செய்வேன் என்கிறார் கதிரேசன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி