சிட்னி:-கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்எச்370 விமானம் மாயமானது.இந்த விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து இருக்கலாம் என கூறப்பட்டது. இதை தொடர்ந்து ஆஸ்திரேலியா, அமெரிக்க போன்ற நாடுகளின் போர் விமானங்கள்,போர்கப்பல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மலேசிய அரசு எம்எச்370 விமானத்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் மரணம் அடைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடும் வழங்கப்பட்டது.தற்போது மலேசிய விமானத்தின் பாகங்களை கடலுக்கு அடியில் தேடும் ஒப்பந்தத்தை டச்சு பொறியியல் நிறுவனமான புக்ரோ பெற்று உள்ளது என ஆஸ்திரேலியா அரசு அறிவித்து உள்ளதாக அந்த நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.இந்த நிறுவனம் கடலுக்கு அடியில் ஆய்வு தேடுதல் வேட்டையில் ஈடுபட 2 கப்பல்களை அந்த பகுதிக்கு அனுப்பி உள்ளது.ஆஸ்திரேலிய போக்குவரத்து துறை மந்திரி வாரன் டிரஸ்ட் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி