மும்பை:-பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர்கான், ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் நடித்து வரும் படம் பி.கே., சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் போஸ்டர் பெரும் சர்ச்சையை கிளப்பியது. காரணம், அப்படத்தின் போஸ்டரில் அமீர்கான் நிர்வாணமாக முன்பக்கத்தை டேப்பரிகார்டரை வைத்து மறைத்தபடி போஸ் கொடுத்து இருந்தார்.
பெரும் சர்ச்சை ஏற்படுத்திய இப்போஸ்டருக்கு இரண்டு விதமான விமர்சனங்கள் எழுந்தன. முன்னணி நடிகர் ஒருவர் இப்படி நடித்துள்ளார் என்று சிலர் அமீர்கானை பாராட்டினர், மற்றொருபக்கம் ஒரு முன்னணி நடிகரே இப்படி நடிக்கலாமா என்று விமர்சனமும் எழுந்தது. இதுதொடர்பாக ஒருவர் வழக்கும் தொடர்ந்து உள்ளார். மேலும் இப்படத்தின் போஸ்டரே ஒரு ஆங்கில ஆல்பத்தின் அபட்டமான காப்பி என்று தெரிய வந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி