கிரிக்கெட்டின் ஜாம்பவானான தெண்டுல்கரை சுயநலவாதி என்று கூறுவது கற்பனைக்கு எட்டாத ஒன்றாகும். இதில் எந்தவித நியாயமும் கிடையாது. அவரது ஒவ்வொரு ரன்னும் அணிக்காகவே இருந்தது. அவரது ஒவ்வொரு இன்னிங்சும் அணியின் நலனுக்காகவே இருந்ததே நிரூபித்து இருக்கிறார்.
தெண்டுல்கரின் ஆட்டத்தால் டெஸ்டில் வெற்றி கிடைக்காமல் போனதற்கு அவரை கூற முடியாது. ஏனென்றால் அப்போதைய இந்திய பவுலிங் பலவீனமாக இருந்தது.1998–2003 ஆண்டுகள் தெண்டுல்கரின் பொற்காலமாக இருந்தது. இந்த காலத்தில் அவர் இந்திய மண்ணிலும், வெளிநாட்டு மண்ணிலும் ரன்களை குவித்தார்.தென்ஆப்பிரிக்க மண்ணில் அவர் கடைசியாக அடித்த டெஸ்ட் சதம் மிகவும் அபாரமானது. ஸ்டெயின், மார்கல் பந்துவீச்சை எதிர்கொண்டு அபாரமாக ஆடினார்.
2003 உலக கோப்பையில் வலை பயிற்சியில் அவர் ஒரு பந்தை கூட சந்திக்கவில்லை. ஆனால் அனைத்து ஆட்டங்களிலும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தார். கடந்த 20 ஆண்டுகளில் களத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இந்திய கிரிக்கெட்டின் வரைப் படத்தை சச்சின் மாற்றிவிட்டார். அவருடைய ஆட்டம் அனைவரிடத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தெண்டுல் கருடன் இணைந்து ஒரு கிரிக்கெட் தலைமுறையே உருவானது.கடந்த 24 ஆண்டுகளாக ஒரு தலைமுறை சச்சினின் ஆட்டத்தை பார்த்து ரசிக்கும் வாய்ப்பை பெற்றது. உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக அவர் இருந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் நாங்கள் என பெருமையாக சொல்லி கொள்ளும் வாய்ப்பு ஒரு தலைமுறைக்கு கிடைத்து இருக்கிறது.
தெண்டுல்கர் ஒரு ஜாம்பவான். நான் விளையாடிய காலத்தில் சிறந்த வீரராக இருந்தவர். அனைவருக்கும் முன் மாதிரியாக திகழ்ந்தவர். 16 வயதில் களம் இறங்கி அவர் விளையாடியது வியப்பாக இருந்தது. அவருடைய ஆட்டம் கற்பனையை மிஞ்சும் வகையில் இருந்தது. அவரது ஆட்டம் என்னையும் ஈர்த்தது. அதனால் தான் நானும் டெஸ்ட் வீரராக விரும்பினேன்.இவ்வாறு ராகுல் டிராவிட், தெண்டுல்கரை புகழ்ந்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி