மூன்று குழந்தைகளுக்கும் பேபன் , மாடிசன் மற்றும் பைகே என பெயரிட்டு உள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே 4 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது.தற்போது பிறந்து உள்ள 3 குழந்தைகளை அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்படுகிறது . இதற்காக குழந்தையின் தந்தை ஒரு வித்தியாசமான யோசனையை தனது மனைவிக்கு கொடுத்தார். அந்த யோசனையின்படி மூன்று குழந்தைகளின் நகங்களிலும் மூன்று வெவ்வேறு நிறங்களில் நக பாலீஷ் போட்டு குழந்தைகளின் வித்தியாசத்தை கண்டுபிடிக்கலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி குழந்தை பேபனுக்கு பிங்க் கலரிலும், மாடிசன் புதினா பச்சை, பைகே ஊதா கலரும் காலின் பெருவிரல் நகத்தில் வண்ணம் தீட்டி உள்ளனர்.
இந்த மூன்று குழந்தைகளுக்காக வாரந்தோறும் 84 பாட்டில்கள் பால் மற்றும் 120 நேப்பிஸ் என்று கூறப்படும் குழந்தைகளின் ஆடைகளை பயன்படுத்துவதாகவும் அதன் பெற்றோர்கள் கூறினர்.இது குறித்து குழந்தையின் தாயார் கிரண் கூறும் போது:இது எங்களுக்கு வித்தியாசமான வேடிக்கையான ஆண்டாக உள்ளது. ராணுவ நடவடிக்கை மாதிரி இதை நாங்கள் ’’ஆபரேஷன் மூவர்’’ என அழைக்கிறோம்.எங்களுக்கு மூன்று சிக்கல்.ஆனால் இதற்கு வேறு வழி இல்லை.இவர்கள் ஒரு வயதை அடையும் முன்பே பெரிய டிவி ஸ்டாராகி விட்டனர்.இவர்கள் எங்களுக்கு மகிழ்ச்சியை கொண்டுவரும் அழகான பெண்கள் இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி