புதுடெல்லி:-இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, 1945 ஆகஸ்ட் 6ம் தேதி ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியது. இதன் காரணமாக அந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் இறந்தனர்.
உலக வரலாற்றில் மிக கொடுமையான நிகழ்வாக கருதப்படும் இந்த ஹிரோஷிமா தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.அதில், ஹிரோஷிமாவில் உயிரிழந்தவர்களை இன்று நாம் நினைவில் கொள்வோம். இனி இதுபோன்ற நாளை எப்போதும் மனித குலம் சந்திக்காது என்று நம்புகிறேன். வரும் ஆண்டுகளில் உலக அமைதிக்காகவும், மகிழ்ச்சியான உலகை உருவாக்கவும் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி