சென்னை:-நடிகை நயன்தாரா தற்போது அறிமுக இயக்குனர் அஷ்வின் சரவணன் இயக்கும் புதிய படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பேய்க் கதையான இந்தப் படத்தில் ‘நெடுஞ்சாலை’ படத்தின் நாயகன் ஆரி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் இயக்குனர் அஷ்வின் யாரிடமும் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த அனுபவம் இல்லாதவர்.
படத்தின் தயாரிப்பாளர்களிடம் கதை சொல்வதற்குப் பதிலாக, அந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு முக்கியக் காட்சியை ஐந்து நிமிடத்திற்கு படம் பிடித்துக் காட்டி, படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். அதே காட்சியை நயன்தாராவிடமும் காட்டி அவரையும் படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்திருக்கிறார்.
நயன்தாரா ஒரு ஸ்டாரைப் போலப் பழகாமல் மிகவும் எளிமையாகப் பழகுகிறார். புது இயக்குனர்தானே என அவர் எந்த கேள்வியும் கேட்பதில்லை. இந்தப் படத்தில் அவர் நடிக்க சம்மதித்தது எந்த அளவிற்கு மகிழ்ச்சியைத் தருகிறதோ, அவர் நடிப்பும் மிகவும் அற்புதமாக உள்ளது என்கிறார் படத்தின் இயக்குனர் அஷ்வின்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி