மான்செஸ்டர் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும். இதனால் வருண் ஆரோனை அணியில் சேர்க்க வேண்டும். இந்திய அணியின் பேட்டிங் மோசமான நிலையில் இருக்கிறது. இதற்காக தவான் இடத்தில் காம்பீரை சேர்க்க வேண்டும் என்று கூறவில்லை. தற்போதுள்ள நிலையில் அணிக்கு புதிய யுக்திகள் தேவை.மேற்கு வங்காளதேசத்தை சேர்ந்த முகமது ஷமியின் பந்துவீச்சு இங்கிலாந்து தொடரில் ஏமாற்றம் அளிக்கிறது. இதற்கு இடைவிடாத போட்டி தான் காரணம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் இந்த வயதில் கிரிக்கெட் விளையாடவில்லை என்றால் என்ன செய்வார்.
லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றிக்கு காரணமாக இஷாந்த்சர்மா காயம் காரணமாக 3–வது டெஸ்டில் ஆடவில்லை. இது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. 4–வது டெஸ்டிலும் அவர் ஆடுவதற்கான வாய்ப்பு குறைவே.இதேபோல புவனேஸ்வர் குமாரும் காயம் அடைந்துள்ளார். அவரும் மான்செஸ்டர் டெஸ்டில் விளையாடுவது சந்தேகமே. இதன் காரணமாகவே வருண் ஆரோனுக்கு வாய்ப்பு அளிக்க கங்குலி வலியுறுத்தி உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி