லாஸ் ஏஞ்சல்ஸ்:-அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள அல்ஹம்ப்ரா நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து தப்பி அப்பகுதியில் உள்ள தெருக்களில் குறுக்கும் நெடுக்குமாக ஓடிய 70 கிலோ எடை கொண்ட ஆப்பிரிக்க ஆமையை போலீசார் விரட்டிச் சென்று பிடித்து கடல் ஆமை மற்றும் ஆமைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இந்த செய்தியை கேள்விப்பட்ட சுமார் 20 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் ஆமையின் உரிமையாளர்கள் அதை தங்களுடன் எடுத்து சென்றனர்.அந்த ஆமை எங்களுக்கே தண்ணி காட்ட பார்த்தது. ஆனால், எங்கள் போலீசார் சாமர்த்தியமாக அதை விரட்டிச் சென்று பிடித்தனர் என்று ஒரு போலீஸ் அதிகாரி தனது பேஸ்புக் பக்கத்தில் வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி