இந்த படம் ராகினியின் நெருங்கிய வட்டத்தினர் கூறுகையில், இந்த படத்தில் நடிப்பதை மிகச் சிறந்த அனுபவ பயணமாக ராகினி நினைக்கிறார். இது நகைச்சுவை கலந்த அரசியல் கதை. படத்தில் வரும் ஒவ்வொரு நகைச்சுவை வசனமும் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். மோகன்லால் ராகினிக்கு நல்ல சப்போட்டிவாக இருந்து வருகிறார்.
ராகினி மறந்து விட்ட வசனங்களை அவருக்கு எடுத்துக் கொடுத்து பெரிதும் உதவி செய்கிறார்.ராகினி இந்தி பேசும் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் அவருக்கு மலையாளம் பேசுவது கஷ்டமாக உள்ளது. ஆனால் மோகன்லால் உதவி செய்து வருவதால் ராகினி இப்போது நன்றாக மலையாளம் உச்சரிக்க பழகி வருகிறார் என்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி