அந்தவகையில் இந்திய அளவில் ஒரே படத்தில் தாத்தா-மகன்-பேரன் என மூன்று பேரும் இணைந்து நடித்தது இந்த படமாகத்தான் இருக்கும் என்று தெரிகிறது. அந்த படத்தைத் தொடர்ந்து தற்போது அடுத்த படத்தில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் நாகார்ஜூனாவுக்கு தமிழ்ப்பட இயக்குனர் லிங்கசாமியின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை நீணடகாலமாக உள்ளதாம்
இதை சமீபத்தில் சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கியுள்ள அஞ்சான் தெலுங்கு பதிப்பான சிக்கந்தர் படத்தின் ஆடியோ ரிலீஸ் ஐதராபாத்தில் நடைபெற்றபோது வெளிப்படுத்தியிருக்கிறார் நாகார்ஜூனா. அதையடுத்து, என்னிடமும் உங்களுக்கு பொருத்தமான ஒரு ஆக்சன் ஸ்கிரிப்ட் உள்ளது. அதனால் கண்டிப்பாக சீக்கிரமே நாம் இணைவோம் என்று அதே மேடையில் தெரிவித்த லிங்குசாமி, அந்த படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் இயக்க திட்டமிட்டுள்ளாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி