விண்வெளியில் அதிகரித்துவரும் கழிவுகளை கண்காணிக்க இணைந்து பணியாற்றுவதாக இந்த இரு நாடுகளும் முடிவெடுத்ததைத் தொடர்ந்தும், ஜப்பான் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான விண்வெளிக் கூட்டுறவை உறுதிப்படுத்தும் எண்ணத்திலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஜப்பான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘நான்காவது போர்க்களம்’ என்று குறிப்பிடப்பட்ட இந்த படையானது அமெரிக்க ராணுவத்திற்குத் தேவையான தகவல்களை அளித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை பலப்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஜப்பானின் விமானப் பாதுகாப்புப் படையில் உள்ள சுய பாதுகாப்புப் பிரிவில் செயல்பட்டு வரும் வீரர்களில் இருந்து இந்த விண்வெளிப் படைக்கான வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி