சென்னை:-நடிகர் விஜய்க்கு கேரளாவில் கிடைத்த மிகப் பெரும் வரவேற்பு மற்ற நடிகர்களுக்கும் அங்கு தாங்களும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் தனக்கு கிடைத்த புகழை மனதில் வைத்துக் கொண்டு, மலையாள நடிகரான மோகன்லாலுக்கு தனது ‘ஜில்லா‘ படத்தில் முக்கிய வேடம் ஒன்று கொடுத்து கேரளாவில் ஸ்டிராங்காக காலை ஊன்றி விட்டார் விஜய்.
இந்த ஆசை இப்போது சூர்யாவுக்கும் வந்துவிட்டது. ‘அஞ்சான்‘ படத்தின் பிரமோஷனுக்காக ஹைதராபாத் பயணத்தை முடித்து விட்டு மறுநாளே கொச்சி சென்று விட்டார் சூர்யா, அவருடன் படத்தின் இயக்குனர் லிங்குசாமியும் சென்றார். அங்கு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சூர்யா பதிலளித்தார்.
அப்போது, மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மோகன்லாலுடன் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளேன். அவர் எப்போது என்னை அழைத்தாலும் உடனே அவரது படத்தில் நடிக்க சம்மதிப்பேன் என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி