அதனால் இப்போது ஈட்டி, இரும்புக்குதிரை, கணிதன் என முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்கள் அவருக்கு கிடைத்திருக்கிறது.இதில் ஈட்டி படத்தில் தடகள வீரராக நடிக்கும் அதர்வா, இரும்புக்குதிரையில் ரேஸ் வீரராக நடிக்கிறார். இதில் ஈட்டி படத்தில் கிட்டத்தட்ட கடைசி கட்டத்தில் நடித்துக்கொண்டிருக்கும் அதர்வா, க்ளைமாக்ஸ் சண்டை காட்சிக்காக சிக்ஸ்பேக்கிற்கு மாறியுள்ளார்.
இதற்காக அவர் உடல்கட்டை மாற்றியமைக்க இரண்டு மாதம் மட்டுமே டயம் கேட்டாராம் அதர்வா. அப்போது அவருடன் அப்படத்தில் டூயட் பாடும் ஸ்ரீதிவ்யா, இரண்டு மாதத்தில் எப்படி சிக்ஸ்பேக் உடல்கட்டுக்கு மாற முடியும் என்றாராம். அதற்கு, என்னால் முடியும், பொறுத்திருந்து பார் என்று கூறிவிட்டு வந்த அதர்வா, சரியாக 60 நாட்களில் சிக்ஸ்பேக் அதர்வாவாக படப்பிடிப்பு தளத்தில் போய் நின்று ஸ்ரீதிவ்யாவுககு பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்தாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி