சில பிரபலமில்லாத நடிகர்களுடன் நடித்துக்கொண்டிருந்த அஞ்சலி ஒரு கட்டத்தில், அமெரிக்காவில் உள்ள தனது பாய்ப்ரண்டை சந்திக்க சென்று கொண்டிருந்ததால் உடம்பை பராமரிப்பதை மறந்து விட்டார்.விளைவு, உடல் பெருத்து கிட்டத்தட்ட மறைந்த கவர்ச்சி நடிகை சில்க்ஸ்மிதா போல் ஊதி போய் இருந்தார். அப்போது ஒரு தெலுங்குப்பட டைரக்டரிடம் சான்ஸ் கேட்டு அஞ்சலி சென்றபோது, உன் தோற்றத்தைப்பார்த்தால் நீ கதாநாயகியாக நடிப்பதை விட சில்க்ஸ்மிதா போன்று கவர்ச்சி ஆட்டக்காரியாக நடிக்க முடிவெடுத்தால் ஒரு பெரிய ரவுண்டே வரலாம் என்று கூறினாராம்
இதனால் கடுப்பான அஞ்சலி, அந்த டைரக்டரை கண்டபடி திட்டித்தீர்த்து விட்டு வெளியேறி வந்தாராம். அதன்பிறகுதான் தெலுங்கு சினிமாவில் இனி நாம் சான்ஸ் கேட்பது முறையல்ல என்று முடிவெடுத்தாராம் அஞ்சலி. பின்னர் சில மாதங்களாக ஜிம்னாஸ்டிக் பயிற்சி எடுத்து உடல் எடையை குறைத்து விட்டு தமிழில் நடிக்க முயற்சி எடுத்திருக்கிறார்.அந்த முயற்சியின் பலனாகத்தான் இப்போது ஜெயம்ரவியுடன் நடித்துக்கொண்டிருக்கிறார். இதையடுத்தும் சில படங்களில நடிக்க திரைக்குப்பின்னால் தீவிரமான முயற்சிகளில் இறங்கியிருக்கும் அஞ்சலி, சிங்கம்-2வில் ஆடியது போன்று இனிமேல் எக்காரணம் கொண்டும் குத்தாட்டம் ஆடுவதில்லை என்ற தீர்க்கமான முடிவில் இருக்கிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி