அந்த அளவுக்கு அலியாபட் நடித்த படங்கள் வெற்றியடைந்ததால் நம்பர்-ஒன் கமர்சியல் நடிகையாகி விட்டார். இந்நிலையில், ராஞ்சனா இந்தி படத்தில் நடிக்க மும்பை சென்றபோது அலியாபட்டின் அருமை பெருமைகளை தெரிந்து கொண்ட தனுஷ், அப்போது தான் கமிட்டாகியிருந்த அனேகன் படத்தில் எப்படியாவது அவரை நடிக்க வைத்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.ஆனால், இவர்கள் கேட்ட தேதியில் அவர் கால்சீட் இல்லை என்று மறுத்து விடவே, சமீரா என்ற நடிகையை புக் பண்ணினார். இந்த நிலையில், தற்போது தனுஷின் வேலையில்லா பட்டதாரி தெலுங்கு, இந்தியில் ரீமேக் ஆகிறது. இதன் தெலுங்கு ரீமேக்கில் அல்லு அர்ஜூன் நடிக்கிறார். இந்தியில் தனுஷ் நடிக்கிறார்.
இதையடுத்து, தமிழில் தன்னுடன் ஜோடி சேர்க்க முடியாத அலியாபட்டை இந்த ரீமேக் படத்தில் எப்படியேனும் ஜோடி சேர்த்து விட வேண்டும் என்று முடிவு செய்து விட்ட தனுஷ், அலியாபட்டிடமும் பேச்சுவார்த்தை நடத்தினாராம். அதற்கு, நான் நடிப்பதில் எந்த ஆட்சேபனையும இல்லை. ஆனால் எனது சம்பளம் 3 கோடி அதை நினைவில் கொண்டு முடிவெடுங்கள் என்று ஒரு முன்னெச்சரிக்கை செய்திருக்கிறாராம் அலியாபட்.இதனால் அலியாபட்டை அட்டாக் செய்து விட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருநத தனுஷ், அவர் கொடுத்த இந்த 3 கோடி அதிர்ச்சியால் அட்டாக் வந்தவரைப்போல் இருக்கிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி