‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘ஜெமினி’, ‘அட்டகாசம்’, ‘அசல்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் சரண். இவர் கடைசியாக 2010-ம் ஆண்டு அஜீத்தை வைத்து ‘அசல்’ என்ற படத்தை இயக்கினார். அதன்பிறகு அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை.
இந்நிலையில் 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது ‘ஆயிரத்தில் இருவர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் வினய் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் மூன்று கதாநாயகிகளை அறிமுகம் செய்கிறார். படத்திற்கு பரத்வாஜ் இசையமைக்கிறார். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.
இப்படத்தின் கதாநாயகிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் படத்தின் முதல் பார்வையையும் வெளியிட இருக்கிறார்கள். இதில், திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.
இப்படத்தை சரண் மூவி பேக்டரி நிறுவனமும், சங்கர் பிரவீன் சினி ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி