இந்த நிலையில் முகேஷ்–சரிதா இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதால் அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இந்த நிலையில் நடிகர் முகேஷ் எர்ணாகுளம் குடும்ப நலக்கோர்ட்டில் சரிதாவிடம் இருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் வழக்கு விசாரணை எர்ணாகுளம் குடும்ப நலக்கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்காக நடிகர் முகேசும், சரிதாவும் தங்கள் 2 குழந்தைகளுடன் ஆஜரானார்கள்.
அப்போது நடிகை சரிதா விவாகரத்து வழக்கில் தனக்கு கோர்ட்டில் இருந்து முறைப்படி அனுப்பப்படும் நோட்டீசு கிடைக்கவில்லை என்றும், விவாகரத்து காலத்திற்கான அவகாசமும் தனக்கு வழங்கப்படவில்லை என்றும் முகேஷ் இந்த வழக்கில் தனக்கு தெரியாமல் சதி செய்வதாகவும் தெரிவித்தார். இதை தொடர்ந்து இந்த விசாரணையை வருகிற 27–ந்தேதி கோர்ட்டு தள்ளி வைத்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி