சென்னை:-சென்னையில் 15 வயதுக்குட்பட்டவர்கள் விளையாடும் ‘ஜூனியர் கிரிக்கெட்’ போட்டிகள் இன்று முதல் 7ம் தேதி வரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து 16 பேர் கொண்ட கிரிக்கெட் குழு நேற்றிரவு சென்னை வந்திருந்தது.
இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வந்த குழுவினரை இன்று காலை இலங்கைக்கு திருப்பி அனுப்பி விட்டதாக சென்னை போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி