செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் சீன நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 381 ஆக உயர்வு!…

சீன நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 381 ஆக உயர்வு!…

சீன நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 381 ஆக உயர்வு!… post thumbnail image
பெய்ஜிங்:-சீனாவின் தென்மேற்கு யுனான் மாகாணத்தில் உள்ள சாவோடாங் நகரம் லூதியன் பகுதியில் சுமார் 3 லட்சம் பேர் வசிக்கின்றனர். நேற்று மாலை அங்கு கடுமையான பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. கியாவோஜியா என்ற இடத்தில் பூமிக்கு அடியில் 12 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அங்கு இருந்தவர்கள் வெளியே ஓடினர். மின்சாரம் மற்றும் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

இந்த நில நடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ரிக்டர் கருவியில் 6.5 அளவு நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 180 பேர் பலியாகி விட்டதாகவும் 1300 காயம் அடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 381 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும் நிவாரண நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி