நட்டு நடராஜ்-இஷாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘சதுரங்க வேட்டை’. விஜய் மில்டனிடம் உதவியாளராக இருந்த வினோத் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தை இயக்குனரும், நடிகருமான மனோபாலா தயாரித்திருந்தார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, இப்படத்தை இயக்கிய எச்.வினோத்திற்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், எச்.வினோத் இயக்கும் அடுத்த படத்தை ‘சதுரங்க வேட்டை’ படத்தை வெளியிட்ட திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது.
இதுகுறித்து வினோத் கூறும்போது, எங்களுடைய தயாரிப்பில் ஒரு படம் பண்ணவேண்டும் என்று லிங்குசாமி ஏற்கெனவே கூறியிருந்தார். அதன்படி எனது அடுத்த படத்தை அவருடைய பேனரில் பண்ணப் போகிறேன். இப்படம் சதுரங்க வேட்டையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் மக்களுக்கு நான்கு நல்ல விஷயத்தை சொல்லுகிற படமாக இது இருக்கும் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி