கிளாஸ்கோ:-இந்த ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்று வந்தது. அங்குள்ள க்ளாஸ்கோ நகரில் கடந்த 23ம் தேதி துவக்க விழா நிகழ்ச்சிகளுடன் துவங்கிய போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது.
இதில் இந்தியா 15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலம் ஆகிய பதக்கங்களுடன் மொத்தமாக 64 பதக்கங்கள் பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்தது. இங்கிலாந்து அணி 58 தங்கம், 59 வெள்ளி, 57 வெண்கலப்பதக்கங்களையும் வென்று முதலிடத்தை பிடித்தது. அதே போல் 49 தங்கம், 42 வெள்ளி மற்றும் 46 வெண்கலத்துடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தையும், 32 தங்கம், 16 வெள்ளி, 34 வெண்கலத்துடன் கனடா மூன்றாவது இடத்தையும், 19 தங்கம், 15 வெள்ளி, 19 வெண்கலம் ஆகிய பதக்கங்களுடன் ஸ்காட்லாந்து நான்காவது இடத்தையும் பிடித்தன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி