சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வரும் படம் ’கத்தி’.இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற்று வரும் வேளையில் இப்படத்தைப் பற்றி ஒரு சுவையான செய்தி வெளி வந்துள்ளது.
இந்தப் படத்தில் விஜய் இரண்டு பாடல்களை பாடுகிறாராம். ஏற்கெனவே ஆண்ட்ரியாவுடன் ஒரு பாடலை பாடிவிட்ட விஜய் இன்னொரு பாடலை ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து பாடப் போகிறாராம். விஜய் ஓகே சொன்ன மறுகணமே இந்த விஷயத்தை லண்டனில் முகாமிட்டிருந்த ஸ்ருதிஹாசனை தொடர்பு கொண்டு கூறியிருக்கிறார் அனிருத்.
அதற்கு ஸ்ருதியும் மறுப்பேதும் தெரிவிக்காமல் சரியென்று சொல்லிவிட்டராம். ரெக்கார்டிங் அன்று எங்கிருந்தாலும் பறந்து வந்துவிடுகிறேன் என்று வாக்குறுதியும் அளித்திருக்கிறாராம். அதனால், சம்மந்தப்பட்ட பாடல் டியூனை ஸ்ருதி ஹாசன் பயிற்சி எடுப்பதற்காக முன்கூட்டியே அனுப்பி வைத்துவிட்டாராம் அனிருத்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி