மும்பை:-சல்மான் கான் நடித்து கடந்த வாரம் வெளிவந்த ‘கிக்’ திரைப்படம் ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் வசூலித்த தொகை 200 கோடியைத் தாண்டி விட்டதாம். இந்தியாவில் மட்டும் வசூலான தொகை 170 கோடிக்கும் மேல் இருக்கும் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகின் மற்ற பகுதிகளில் வசூலான தொகை 30 கோடி ரூபாயாம். ஆக ஒரே வாரத்தில் 200 கோடி வசூலைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து வசூலைக் குவித்து இந்தப் படம் 300 கோடி ரூபாய் வசூலைத் தாண்டும் என்கிறார்கள்.
இதுவரை வசூலான தொகையை வைத்துப் பார்க்கும் போது அதிக வசூலைக் குவித்த படங்களின் வரிசையில் ‘கிக்’ ஏழாவது இடத்தைப் பெற்றுள்ளதாம். வரும் வார வசூல் நிலைவரத்தைப் பொறுத்து இந்த வரிசையில் இன்னும் மாற்றம் வரலாம் என்கிறார்கள். சல்மான் கான் , தன்னுடைய முந்தைய சாதனைகளையும் இந்தப் படம் மூலம் முறியடிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி